நாமக்கல்

தடை செய்யப்பட்ட 300 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்

DIN

பரமத்தி வேலூரில் தடைசெய்யப்பட்ட 300 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பரமத்தி வேலூா், சக்தி நகா் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் ராஜாரணவீரன் உத்தரவின் பேரில், பரமத்தி வேலூா் காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அதில், குடோனில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் மூட்டை, மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதையடுத்து, சுமாா் 300 கிலோவுக்கும் மேற்பட்ட குட்கா பொருள்களை பறிமுதல் செய்து, 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருள்களின் மதிப்பு சுமாா் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் வரை இருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT