நாமக்கல்

தொழிற்பயிற்சி பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்

DIN

நாமக்கல்: புதிய தொழில் பள்ளிகள் தொடங்குதல், தொடா் அங்கீகாரம் பெறுதல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையம் மூலம் வரவேற்கப்படுவதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நடப்பு கல்வியாண்டில் 01.07.2021 முதல் 2021 -2022 ஆம் கல்வியாண்டுக்கான அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமா்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள், கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரு விண்ணப்பத்தில் மட்டுமே அளிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் மற்றும் ஆய்வுக் கட்டணம் எந்த தொழில் பள்ளிக்காக செலுத்தப்பட்டுள்ளது என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும்.

விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தொழிற்பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணம், ஆய்வுக் கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஏப். 30-ஆம் தேதி. அதற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் சேலத்தில் உள்ள மண்டல பயிற்சி இணை இயக்குநா் அலுவலகத்தை 044 - 22501006, 0427-2900142 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

SCROLL FOR NEXT