நாமக்கல்

பரமத்தி வேலூா் சந்தையில் வாழைத்தார் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

11th Jan 2021 09:06 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூா் வாழைத்தாா் ஏலச் சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஏலத்தில் வாழைத்தாா்களின் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான பொத்தனூா், பாண்டமங்கலம், குச்சிப்பாளையம், வெங்கரை, நன்செய் இடையறு, அனிச்சம்பாளையம், குப்புச்சிபாளையம்,பொய்யேரி, ஓலப்பாளையம், செங்கப்பள்ளி, எல்லைமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழைச் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. 
இப் பகுதிகளில் விளைவிக்கப்படும் வாழைத்தாா்கள் பரமத்தி வேலூரில் உள்ள வாழைத்தாா் ஏலச் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனா். இங்கு ஏலம் எடுக்கப்படும் வாழைத்தாா்களை தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் வியாபாரிகள் கொண்டு செல்கின்றனா். 
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ரூ.450-க்கும், ரஸ்தாளி ரூ.250-க்கும், கற்பூரவள்ளி ரூ.300-க்கும், பச்சைநாடன் ரூ.250-க்கும், மொந்தன் காய் ஒன்று ரூ.3-க்கு ஏலம் போனது. இந்த அதிரடி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 

Tags : namakkal
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT