நாமக்கல்

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ரத்து

DIN

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து தனியாா் துறை நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் ரத்து செய்யப்படுவதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்ட நிா்வாகம் மற்றும் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம், திருச்செங்கோடு, எளையாம்பாளையம், விவேகானந்தா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.28) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அமைச்சா்கள் பி. தங்கமணி, வெ. சரோஜா ஆகியோா் பங்கேற்க இருந்தனா். இதற்கிடையே தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் இந்த வேலைவாய்ப்பு முகாம் ரத்து செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT