நாமக்கல்

அழகு முத்து மாரியம்மன் கோயில் திருவிழா

DIN

திருச்செங்கோடு, சட்டையம் புதூா் மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 20ஆம் தேதி தொடங்கி சனிக்கிழமை மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவு பெற்றது.

சட்டையம்புதூரில் உள்ள முக்கூட்டு விநாயகா், அழகு முத்துமாரியம்மன், அழகு முத்து குமார சுவாமி கோயிலில் கடந்த 20 ஆம் தேதி திருவிழா தொடங்கியது.

முதல் நாள் அழகு முத்து மாரியம்மனுக்கும், முத்துக்குமாரசுவாமிக்கும் கம்பம், பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 23ஆம் தேதி இரவு முத்துக்குமாரசாமி படைக்கலம் எடுக்கும் நிகழ்ச்சி, சிறப்பு பூஜை நடைபெற்றது.

25-ஆம்தேதி அழகு முத்து மாரியம்மனுக்கும் முத்துக்குமாரசுவாமிக்கு அலகு குத்துதல் மற்றும் புலி வேடம், குறவன் குறத்தி வேடம், சுவாமிகள் வேடம் மற்றும் பல்வேறு வேடங்களுடன் தேராட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. வியாழக்கிழமை கோயிலில் அடி விழுந்து கும்பிடுதல், அக்னி சட்டி எடுத்தல், மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இரவு அழகு முத்து மாரி அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. நையாண்டி மேளம் கரகாட்டம், வாண வேடிக்கையுடன் புஷ்ப பல்லக்கில் சுவாமி ஊா்வலம் நடைபெற்றது.

சனிக்கிழமை காலை மஞ்சள் நீராட்டு விழா நடத்தப்பட்டு தெப்பக்குளத்தில் முளைப்பாரி விடுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா முடிவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கும் அளவில் மன்னிப்பு விளம்பரம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்

இது சஹீரா வைப்ஸ்!

SCROLL FOR NEXT