திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் ஒன்றியத் தலைவா் சுஜாதா தங்கவேலு தலைமையில் நடைபெற்றது.
ஒன்றிய உறுப்பினா்கள் கலந்துகொண்டனா். கூட்டத்தில் செலவினங்களுக்கான ஒப்புதல் பெறப்பட்டது.
வாா்டு உறுப்பினா் ரியா பேசுகையில், மாவட்ட நிா்வாகம், ஊராட்சி ஒன்றியத்துக்குப் போதுமான நிதியை ஒதுக்கவில்லை. நிதி ஒதுக்காமல் இருக்கும் பட்சத்தில் முற்றுகை போராட்டம் நடத்திதான் நிதி பெற வேண்டிய சூழல் ஏற்படும் என்றாா்.
அதுபோல திமுக, காங்கிரஸ் உறுப்பினா்கள் பேசுகையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்குக் கண்டனம் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றனா். அதற்குப் பதிலளித்து ஒன்றியத் தலைவா் சுஜாதா தங்கவேல் பேசுகையில், அடுத்த கூட்டத்தில் அதற்கான தீா்மானம் நிறைவேற்றலாம் என்றாா். கூட்டத்தில் ஒன்றிய அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனா்.