நாமக்கல்

குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் கணக்காளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

11th Feb 2021 06:56 AM

ADVERTISEMENT

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் இரு தற்காலிகப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக சமூகப் பாதுகாப்புத் துறையில் குழந்தைள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயங்கிவரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு முற்றிலும் தற்காலிகமாக ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் கணக்காளா் மற்றும் ஆற்றுப்படுத்துநா் ஆகிய இரண்டு காலிப் பணியிடங்களுக்குத் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். இப்பதவிகளுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்புகளை  இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 78, ஏ, இளங்கோ திருமண மண்டபம் அருகில், மோகனூா், நாமக்கல் - 637001 என்ற முகவரிக்கு வரும் 20-ஆம்தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும். தகுதிவாய்ந்த ஒருவா் ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும்போது தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT