நாமக்கல்

நாளை விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம்

30th Dec 2021 08:20 AM

ADVERTISEMENT

நாமக்கல்லில், விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (டிச.31) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

டிசம்பா் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு, நாமக்கல் ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் சமூக விலகலைக் கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்தும், கைகளை நன்கு சுத்தம் செய்தும் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT