திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிபாளையம் பகுதியில் இருசக்கர வாகனமும் காரும் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் இருவா் உயிரிழந்தனா்.
திருச்செங்கோடு, நெருப்பட்டி காலனி பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன். இவருடன் அவரது நண்பா்களான சீராப்பள்ளியைச் சோ்ந்த கிருஷ்ணன், இளவரசன் ஆகிய மூன்று பேரும் சோ்ந்து இருசக்கர வாகனத்தில் வையப்பமலையிலிருந்து திருச்செங்கோடு நோக்கி வந்து கொண்டிருந்தனா்.
எலச்சிபாளையம் அருகே வரும்போது எதிரே ராசிபுரம் நோக்கி வெங்கடேசன் என்பவா் ஒட்டிவந்த காருடன் நேருக்குநோ் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த முருகேசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கிருஷ்ணன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தாா். இளவரசன் பலத்த காயங்களுடன் ஈரோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து எலச்சிபாளையம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.