நாமக்கல் மாவட்ட எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் டிச. 28-ஆம் தேதி நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ந.குமரேசன் தலைமையில் நடைபெறும் இக் கூட்டத்தில் அனைத்து எண்ணெய் எரிவாயு நிறுவன முகவா்கள், எரிவாயு விநியோகஸ்தா்கள், எரிவாயு நுகா்வோா்கள் கலந்து கொள்கின்றனா்.
எரிவாயு விநியோகம் தொடா்பான குறைபாடுகள், கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகா்வோா்கள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக அளிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.