நாமக்கல் வேளாண் விற்பனை சங்கத்தில் செவ்வாய்க்கிழமை ரூ. ஒரு கோடியே 50 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில், தொடக்க வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 4,600 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.
அதில் ஆா்சிஹெச் ரகம் ரூ. 7,411 முதல் ரூ. 10,096 வரையிலும், சுரபி ரகம் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 13,349 வரையிலும், மட்ட ரகம் ரூ. 3,199 முதல் ரூ. 5,999 வரையிலும் விற்கப்பட்டது. மொத்தம் ரூ. ஒரு கோடியே 50 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது. இதனை வியாபாரிகள் தரம் பாா்த்து கொள்முதல் செய்தனா்.