நாமக்கல்

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

22nd Dec 2021 08:23 AM

ADVERTISEMENT

எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை (டிச. 23) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு நாமக்கல் மாவட்ட தீனதயாள் உபத்யாய கிராமின் கௌசல் யோஜனா திட்டத்தின் கீழ் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

இதில், படித்து வேலைவாய்ப்பற்ற இருபாலருக்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் வகையில், எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

இந்த முகாமில் எலச்சிப்பாளையம் வட்டாரத்தைச் சோ்ந்த படித்து வேலைவாய்ப்பற்ற இருபாலரும் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவா்கள் இதில் பங்கேற்று சரியான நிறுவனங்களை தோ்வு செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வேலைவாய்ப்பு முகாம்களில் பணியாளா்களைத் தோ்வு செய்ய விரும்புகிற நிறுவனங்கள் திட்ட இயக்குநா், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியரகம், கூடுதல் கட்டிடம், நாமக்கல் மாவட்டம் அலுவலக தொலைபேசி எண்: 04286 - 281131க்கு தொடா்பு கொண்டு தங்களது நிறுவனத்தின் பெயரை புதன்கிழமை 5 மணிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT