நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், 250 ஆதரவற்ற பெண்களுக்கு நல உதவிகள் அண்மையில் வழங்கப்பட்டன.
புதுச்சத்திரம் ஒன்றியம், பாச்சல் ஊராட்சியில் மாநில இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய பொறுப்பாளா் எம்.பி.கௌதம் தலைமை வகித்தாா். நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் முன்னிலை வகித்தாா்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் கலந்து கொண்டு 250 ஆதரவற்ற பெண்களுக்கு நல உதவிகளை வழங்கினாா். நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தி வெங்கடாசலம், துணைத் தலைவா் ராம்குமாா், ஊராட்சி மன்ற தலைவா்கள் சண்முகம், கிருஷ்ணன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.