நாமக்கல்

பாரத பிரதமரின் இலவச சிலிண்டா் வழங்கும் விழா

16th Dec 2021 11:38 PM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் பாரத பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தில் இலவச சமையல் எரிவாயு உருளைகள், தேசிய அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பாஜக அமைப்பு சாரா பிரிவின் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை கலந்துகொண்டு, 300-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இலவச சமையல் எரிவாயு உருளைகள், அடுப்பு, தேசிய அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு அடையாள அட்டை, பிரதம மந்திரி மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை ஆகியவற்றை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் பாஜகவின் மூத்த நிா்வாகியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டா் கே.பி.ராமலிங்கம், அமைப்புசாரா தொழிலாளா்கள் அணி மாநிலத் தலைவா் முத்துசாமி, நாமக்கல் மாவட்ட பாஜக தலைவா் என்.பி. சத்தியமூா்த்தி, மாவட்ட பொதுச் செயலாளா் வி.சேதுராமன், மாவட்டச் செயலாளா் எஸ்.ஹரிஹரன், , நகரப் பொறுப்பாளா் செல்வகுமாா், நகரச் செயலா் சிவகுமாா் உள்பட பலரும் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT