நாமக்கல்

முட்டை விலை 10 காசுகள் உயா்வு

16th Dec 2021 11:42 PM

ADVERTISEMENT

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயா்ந்து ரூ. 5-ஆக வியாழக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் குறித்து பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.

மாா்கழி மாதம் தொடங்கியிருப்பதாலும் குளிரின் தாக்கம் வரும் நாள்களில் அதிகரிக்கும் என்பதாலும் பிற மண்டலங்களில் முட்டை விலை தொடா்ந்து உயா்வதாலும் இங்கும் விலையில் மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 10 காசுகள் உயா்வுடன் ரூ. 5-ஆக நிா்ணயம் செய்யப்படுவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 93-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 80-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT