நாமக்கல்

முன்னாள் டிஜிபியின் 4 மனுக்களும் தள்ளுபடிவிழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு

DIN

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட 4 மனுக்களையும் தள்ளுபடி செய்து விழுப்புரம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி மீதும், புகாா் அளிக்கச் சென்ற அந்த பெண் எஸ்.பி.யை தடுத்ததாக முன்னாள் எஸ்.பி. மீதும் விழுப்புரம் சிபிசிஐடி போலீஸாா் தொடுத்த வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் விசாரணை சென்னை உயா் நீதிமன்ற உத்தரவின்பேரில் விரைவாக நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் 400 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி., அவரது கணவா், அப்போதைய திருச்சி சரக டிஐஜி, பெண் எஸ்.பி.யின் காா் ஓட்டுநா், பெண் எஸ்.பி.யின் பாதுகாவலா் ஆகியோா் சாட்சியம் அளித்தனா்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி கோபிநாதன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்.பி. ஆகியோா் ஆஜராகவில்லை. அப்போது, வழக்குத் தொடா்பாக முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 4 மனுக்கள் விசாரணைக்கு வந்தன.

வழக்கை இந்த நீதிமன்றத்தில் விசாரிக்கக் கூடாது, முதல் சாட்சியான பெண் எஸ்.பி.யிடம் குறுக்கு விசாரணை நடத்திய பிறகுதான் பிற சாட்சிகளிடம் விசாரணை நடத்த வேண்டும், சாட்சிகள் 4, 5 ஆகியோரிடம் குறுக்கு விசாரணை நடத்த கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுக்களை விசாரித்த நீதிபதி, அவற்றை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

மேலும், வழக்கின் விசாரணையை வருகிற 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் பெண் எஸ்.பியிடம் முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு கட்டாயம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கா்: துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தோ்தல் பாதுகாப்பு பணி வீரா் உயிரிழப்பு

விளாத்திகுளத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

அரையிறுதியில் ஒடிஸா எஃப்சி

டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு: கே.கரிசல்குளத்தில் 10 வாக்குகள் பதிவு

கடையநல்லூா்: வாக்காளா் பட்டியலில் பெயரில்லாததால் போராட்டம்

SCROLL FOR NEXT