நாமக்கல்

அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது

DIN

நாமக்கல்லில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி  ஆசிரியர் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக மாணவி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் செவ்வாய்க்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

நாமக்கல்லில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10–ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவரை அங்கு பணியாற்றும் அறிவியல் ஆசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்ததாக மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரியவந்தது.

மேலும் மாணவியின் வாட்ஸ் அப்பில் டிச.4 பிறந்த நாளன்று எனது இறந்த நாளாக இருக்கும்  எனக் குறிப்பிட்டிருந்தார். சக தோழிகள் மூலம் விசாரித்ததில் ஆசிரியர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதை தெரிவித்துள்ளார். அவரால் மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தற்கொலை முயற்சிக்கு சென்ற  மகளின் நிலைக்கு காரணமான ஆசிரியர் மீது துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவியின் பெற்றோர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரியிடம் புகார் மனு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து சைல்டு லைன் மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இத்தகவல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் கவனத்திற்கு சென்றது. அவருடைய உத்தரவின்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகுர் அறிவுரையின் பேரில் நாமக்கல் மகளிர் காவல் காவல் ஆய்வாளர் சுமதி மற்றும் போலீசார் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி அளவில் பரமத்திவேலூர் வட்டம் பொத்தனூரில் வீட்டிலிருந்த ஆசிரியர் மதிவாணனை விசாரணைக்காக நாமக்கல் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அவரிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் தவறான தொடுதல் பாலியல் தொந்தரவு என்ற பிரிவின் கீழ் போக்சோ சட்டத்தின் அடிப்படையில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியை கூறுகையில், அவ்வாறான நிகழ்வு ஏதும் இங்கு நடைபெறவில்லை. ஏதோ பழிவாங்கும் நோக்குடன் சிலர் இதனை செயல்படுத்தி உள்ளனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை அனைத்து ஆசிரியர்களும் நேரில் சந்தித்து முறையிட உள்ளோம் என்றார்.

மேலும், சக ஆசிரியர்களிடம் கேட்டபோது, அந்த மாணவி ஓராண்டுக்கு முன் தான் தனியார் பள்ளியில் இருந்து விலகி இப்பள்ளியில் இணைந்தார். புத்தகம் கொண்டு வராதது தொடர்பாக ஆசிரியர் கண்டித்துள்ளார். இதனை தவறாக சித்தரித்து ஆசிரியர் தொழிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என்றனர். இச்சம்பவம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி விசாரணை செய்து வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

SCROLL FOR NEXT