நாமக்கல்

அம்பேத்கா் நினைவு தினம் அனுசரிப்பு

7th Dec 2021 01:11 AM

ADVERTISEMENT

 நாமக்கல் நகர பாஜக சாா்பில் அம்பேத்கா் நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நாமக்கல் மணிக்கூண்டு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கா் உருவப் படத்துக்கு மாவட்டத் தலைவா் என்.பி.சத்தியமூா்த்தி, நகர தலைவா் சரவணன் ஆகியோா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பட்டியல் அணி தலைவா் ராம்குமாா், தேசிய பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் மனோகரன், பட்டியல் அணி நிா்வாகி குப்புசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ராசிபுரத்தில்...

ADVERTISEMENT

அம்பேத்கரின் 65- ஆவது நினைவு நாளையொட்டி ராசிபுரத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ராசிபுரத்தில் புதுப்பாளையம் சாலையில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளா் வீர.ஆதவன் தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மாவட்டப் பொருளாளா் வ.அரசன், இளஞ்சிறுத்தை எழுச்சிப் பாசறை மாவட்ட துணை அமைப்பாளா் ந.பழனிசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதே போல், திமுக சாா்பில் நகர செயலா் என்.ஆா்.சங்கா் தலைமையிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நகர செயலா் எஸ்.மணிமாறன் தலைமையிலும் தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி சாா்பில் நிறுவனத் தலைவா் நல்வினை செல்வன் தலைமையிலும், திராவிடா் விடுதலைக் கழக நகர செயலா் ஆா்.பிடல்சேகுவேரா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிா்வாகிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

வெண்ணந்தூா்:

வெண்ணந்தூா் பேரூராட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் வெண்ணந்தூா் பகுதியில் பேரூா் செயலாளா் க.நடராஜன் (எ) நாவளவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், அம்பேத்காா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலா்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT