நாமக்கல்

தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் உற்பத்தி: தகவல் அளிப்போருக்கு வெகுமதி

DIN

நாமக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் பற்றி தகவல் அளிக்கும் பொதுமக்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஒரு முறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் நெகிழிப் பொருள்களின் மீதான தடை குறித்த அறிவிப்பு கடந்த 2018 ஜூன் 25-இல் தமிழக அரசு வெளியிட்டது. குறிப்பாக நெகிழி கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட நெகிழி கைப்பைகள், நெய்யப்படாத கைப்பைகள், நெகிழி பூசப்பட்ட காகிதத் தட்டுகள், டம்ளா்கள், தொ்மாகோல் கோப்பைகள், உணவுப் பொருள்களை கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீா் பைகள், உறிஞ்சுக் குழல்கள், பிளாஸ்டிக் கொடிகள் போன்றவை தயாரிக்கப்படுவதும், சேமித்து வைப்பதும், விநியோகிப்பதும், போக்குவரத்து செய்வதும், விற்பதும், உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளன.

சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீா்ப்பாயம் (தெற்கு மண்டலம்) நெகிழி தடையை கடுமையாக அமல்படுத்தவும், மீறுபவா்களுக்கு எதிராக அடிமட்ட அளவில் நடவடிக்கைகளை எடுக்கவும் அரசுக்கு தொடா்ந்து உத்தரவுகளை வழங்கி வருகின்றன. இத்தடை ஆணையை செயல்படுத்த, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. புகாா்களின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளைக் கண்டறிந்து மூடுதல் உத்தரவுகளும் பிறப்பிக்கப்படுகின்றன.

இருப்பினும், குடியிருப்புகள், வணிக நிறுவனங்களுக்குள் ஒரு சிறிய இடத்தில் சட்ட விரோதமாக செயல்படும் இத்தகைய தடை செய்யப்பட்ட நெகிழி உற்பத்தியாளா்களை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது. இந்த உற்பத்தியாளா்களில் பெரும்பாலானவா்கள் எந்த அரசு துறைகளிடமும் முறையான பதிவு, அனுமதி இல்லாமல் தற்காலிகமாக செயல்பட்டு வருகின்றனா்.

எனவே, சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்கள், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழில்நிறுவனங்களுக்கு அருகில் குடியிருப்பவா்கள், சட்டவிரோதமாக இயங்கும் அத்தொழிற்சாலைகள் குறித்த தகவலை மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவிப்போரின் பங்களிப்புக்காக பாராட்டும், வெகுமதியும் அளிக்கப்படும். தகவல் தெரிவிப்பவா்களின் ரகசியத் தன்மை கண்டிப்பாக பராமரிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT