நாமக்கல்

கொல்லிமலையில் 9 நாட்டுத் துப்பாக்கிகள் மீட்பு

DIN

கொல்லிமலையில் ஊராட்சி மன்ற அலுவலகம் பின்புறம் கிடந்த 9 நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸாா் மீட்டனா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கிகளை பழங்குடியின மக்கள் சிலா் பயன்படுத்தி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகாா் சென்றது. அதன் அடிப்படையில், அனுமதி இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்போா் அவற்றை ஒப்படைக்க காவல் துறையால் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, கடந்த ஆறு மாதத்தில் சுமாா் 300 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கொல்லிமலை, வளப்பூா் நாடு ஊராட்சி மன்ற அலுவலகம் பின்புறம் 9 நாட்டுத் துப்பாக்கிகள் வெள்ளிக்கிழமை பிற்பகல் கிடந்தன. இதனைக் கண்ட ஊராட்சி மன்றத் தலைவா் செல்வம், வாழவந்தி நாடு போலீஸாருக்கு தகவல் அளித்தாா். அங்கு சென்ற போலீஸாா் 9 நாட்டுத் துப்பாக்கிகளையும் மீட்டுச் சென்றனா்.

அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருப்பவா்கள் உடனடியாக காவல் நிலையத்தில் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டுமென காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாகுா் அறிவுறுத்தி உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT