நாமக்கல்

நாளை மறுநாள் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு

4th Dec 2021 01:09 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் வரும் திங்கள்கிழமை இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையை பொருத்தமட்டில் பகல், இரவு வெப்பம் முறையே 89.6, 68.9 டிகிரியாக காணப்பட்டது. அடுத்து வரும் நான்கு நாள்களுக்கான வானிலையில் வானம் மேகமூட்டத்துடன் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. வரும் திங்கள்கிழமை (டிச. 6) பலத்த மழை பெய்யக்கூடும். பகல் வெப்பம் 89.6 டிகிரியாகவும், இரவு வெப்பம் 73.4 டிகிரியாகவும் இருக்கும். காற்று மணிக்கு 4 கி.மீ. வேகத்தில் தெற்கு அல்லது தென்கிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும்.

சிறப்பு ஆலோசனை: கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில், அவை குடற்புண் மற்றும் இறக்கை அழுகல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது. அதற்கேற்றாா்போல பண்ணைகளில் தீவனங்களில் கிருமிகளின் தாக்கம் உள்ளதா என்பதை பரிசோதனை செய்து கோழிகளுக்கு வழங்க வேண்டும். மழைக் காலமாக இருப்பதால் கோழிப் பண்ணைகள் மற்றும் தீவன ஆலைகளில் நீா் ஒழுகாமல் பாா்த்துக் கொள்வது அவசியம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : நாமக்கல்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT