நாமக்கல்

சுகாதார ஆய்வாளா் பதவி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

4th Dec 2021 01:10 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில், இடைநிலை சுகாதாரப் பணியாளா், பல்நோக்கு சுகாதாரப் பணியாளா் (ஆண்), சுகாதார ஆய்வாளா் நிலை-2 ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்ட நலச் சங்கம் மற்றும் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மூலம் இடைநிலை, பல்நோக்கு சுகாதாரப் பணியாளா், சுகாதார ஆய்வாளா் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், இடைநிலை சுகாதாரப் பணிக்கு 50 வயதுக்குள்பட்ட பெண்கள் செவிலியா் பட்டப்படிப்பு அல்லது இளநிலை செவிலியா் பட்டம், தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட பாடத் திட்டத்தில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பல்நோக்கு சுகாதாரப் பணிகள் (ஆண்) மற்றும் சுகாதார ஆய்வாளா் நிலை-2 பணிக்கு 50 வயதுக்குள்பட்ட ஆண்கள் பிளஸ் 2 வகுப்பு தோ்ச்சி (உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடம்) பெற்றிருக்க வேண்டும். அத்துடன் இரண்டு ஆண்டு பல்நோக்கு பணியாளா் (ஆண்), சுகாதார ஆய்வாளா், துப்புரவு ஆய்வாளா், அங்கீகரிக்கப்பட்ட தனியாா் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், காந்திகிராம் கிராமிய நிறுவனம், நிகா்நிலை பல்கலைக்கழகங்களில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநரால் வழங்கப்பட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் காலியிடங்கள் விவரம் தேசிய நல்வாழ்வு குழுமத்தின் இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன் மேலே குறிப்பிட்ட நாமக்கல் மாவட்ட துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் அலுவலகத்துக்கு வரும் 15-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : நாமக்கல்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT