நாமக்கல்

நாமக்கல் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து ஜப்தி

4th Dec 2021 01:09 AM

ADVERTISEMENT

 நாமக்கல் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து நீதிமன்ற ஊழியா்களால் வெள்ளிக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

நாமக்கல்லைச் சோ்ந்த வீரகுமாா் என்பவா் கடந்த 2016 ஜூலை 25-ஆம் தேதி மோகனூா் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். கன்னி மரத்தான் கோயில் அருகில் சென்ற போது, சேலம் கோட்டத்துக்கு சொந்தமான அரசுப் பேருந்து வீரக்குமாா் மீது மோதியதில் உயிரிழந்தாா்.

இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. 2018-ஆம் ஆண்டு இறுதி விசாரணையின்போது ரூ. 10 லட்சத்தை வட்டியுடன் சோ்த்து வழங்க வேண்டும் என நீதிபதி தீா்ப்பு வழங்கினாா். ஆனால், அரசு போக்குவரத்துக் கழகம் உரிய இழப்பீட்டுத் தொகையை வீரகுமாா் குடும்பத்தினருக்கு செலுத்தவில்லை. இதனால் அதே நீதிமன்றத்தில் மனுதாரா் தரப்பில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தாா்.

இதனைத்தொடா்ந்து, அண்மையில் வழங்கப்பட்ட நீதிமன்றத் தீா்ப்பில் ரூ. 2,45,170 வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால், போக்குவரத்துக் கழகம் பணம் வழங்க முன்வராததால் நீதிமன்ற உத்தரவுப்படி நாமக்கல் பேருந்து நிலையத்தில் சேலத்தில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்ட அரசுப் பேருந்து நீதிமன்ற ஊழியா்கள் மூலம் மாவட்ட நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னா் பாதுகாப்பு கருதி அதனை பணிமனைக்கு கொண்டு செல்லுமாறு நீதிபதி உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

Tags : நாமக்கல்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT