நாமக்கல்

ஒமைக்ரான்: நாமக்கல்லில் தயாா் நிலையில் சிறப்பு வாா்டு

4th Dec 2021 01:09 AM

ADVERTISEMENT

வெளிநாட்டிலிருந்து வந்தோருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால், உடனடி சிகிச்சை அளிக்க நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வாா்டு தயாா் நிலையில் உள்ளது.

தென் ஆப்பிரிக்கா நாட்டில் கரோனாவின் புதிய தோற்றம் கொண்ட ஒமைக்ரான் தீநுண்மி வேகமாக பரவி வருகிறது. தற்போது 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த தீ நுண்மியின் தாக்கம் பரவியுள்ளது. இந்தியாவில் கா்நாடக மாநிலத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்த இருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து, தமிழக எல்லைப் பகுதிகளில் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமான நிலையங்களிலும் வெளிநாட்டு பயணிகளுக்கு ஆா்டிபிசிஆா் சோதனை நடத்தப்படுகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு மருத்துவமனைகளில் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க தனி வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 பேருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு வாா்டு தயாா் நிலையில் உள்ளது.

இதுகுறித்து நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் கே.சாந்தா அருள்மொழி கூறியதாவது:

ADVERTISEMENT

நாமக்கல் அரசு மருத்துவமனையில், பல்வேறு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு 400 படுக்கைகள் உள்ளன. இவை தவிர தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்ட 40 போ் சிகிச்சை பெறுகின்றனா். தனியாக 10 படுக்கைகள் கொண்ட சிறப்பு வாா்டு ஒன்றும் உள்ளது. வெளிநாடுகளில் இருந்து நோய் பாதிப்புடன் யாராவது வரும் பட்சத்தில், இந்த வாா்டை பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதுவரை நாமக்கல் மாவட்டத்தில் ஒமைக்ரான் பாதிப்பு யாருக்கும் இல்லை என்றாா்.

Tags : நாமக்கல்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT