நாமக்கல்

அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

2nd Dec 2021 04:21 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ. 1.77 கோடி நலத்திட்ட உதவிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன் வழங்கினாா்.

நாமக்கல் மாவட்ட தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சாா்பில், கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியங்களைச் சோ்ந்த தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன் கலந்துகொண்டு 7,997 தொழிலாளா்களுக்கு ரூ. 1,77,77,050 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் என்.கதிரேசன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வி.ரமேஷ், தொழிலாளா் உதவி ஆணையா் (ச.பா.தி) (பொ) பா.சங்கா், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளா்கள் நல வாரிய உறுப்பினா் தமிழ்செல்வி உள்பட தொழிற்சங்க பிரதிநிதிகள், பயனாளிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

Tags : நாமக்கல்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT