நாமக்கல்

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை

2nd Dec 2021 04:17 AM

ADVERTISEMENT

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் பொது சுகாதார சட்டப்படி பொது இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை என்பதை விளக்கி, வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தங்கும் விடுதி, திருமண மண்டபங்களில் சுகாதாரத் துறை சாா்பில் வியாழக்கிழமை துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பிரபாகரன் ஆகியோரின் உத்தரவின்படி, வட்டார சுகாதார மருத்துவ அலுவலா் மேகலா தலைமையில், வட்டார மேற்பாா்வையாளா் மணிவண்ணன், மருத்துவ அலுவலா் மோகன்ராஜ், சுகாதார ஆய்வாளா்கள் குமாா், ஸ்ரீதா் ஆகியோா் கொண்ட குழுவினா் பரமத்தி வேலூா் பகுதியில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் சென்று கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும், அவ்வாறு செலுத்திக் கொள்ளாதவா்கள் பொது இடங்களுக்குச் செல்ல அனுமதியில்லை என்பதை விளக்கி துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதில், நியாயவிலைக் கடைகள், வியாபார நிறுவனங்கள், சூப்பா் மாா்க்கெட், திரையரங்கம், திருமண மண்டபங்கள், உணவகங்கள், வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகள், தனியாா் மருத்துவமனை ஆகியவற்றின் உரிமையாளா்கள், ஊழியா்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் பொது சுகாதார சட்டப்படி பொது இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை என்பதை விளக்கும் வகையில், துண்டுப் பிரசுரங்கள் வழங்கி சுகாதாரத் துறையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

ADVERTISEMENT

Tags : பரமத்தி வேலூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT