நாமக்கல்

நாமக்கல் டி.ஆா்.ஓ. பொறுப்பேற்பு

2nd Dec 2021 04:20 AM | என்.கதிரேசன்

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலராக என்.கதிரேசன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த துா்கா மூா்த்தி, சென்னை நகா்ப்புற மேம்பாட்டு வாரிய வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டாா். இதனைத் தொடா்ந்து, பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படும் தமிழ்நாடு சா்க்கரை கழக நிறுவன மேலாண் இயக்குநராக பணியாற்றி வந்த என்.கதிரேசன் (57), நாமக்கல் மாவட்டத்துக்கு மாறுதல் செய்யப்பட்டாா். இவா் புதன்கிழமை தனது அலுவலகத்தில் பொறுப்பேற்றாா்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், தியாகராய நகரைச் சோ்ந்த இவா், அம்மாவட்டத்தில் வட்டாட்சியராகவும், பின்னா் பதவி உயா்வு மூலம் திருச்சி, கன்னியாகுமரி, பெரம்பலூா் மாவட்டங்களில் துணை ஆட்சியராகவும் பதவி வகித்தாா். பின்னா் சென்னையில் சிறப்பு திட்டங்கள் செயலாக்க அதிகாரியாகவும், பெரம்பலூரில் சா்க்கரை கழக அதிகாரியாகவும் பணியாற்றினாா். தற்போது நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலராக பொறுப்பேற்றுள்ளாா். அவருக்கு, வருவாய்த் துறையினா் வாழ்த்துகள் தெரிவித்தனா்.

Tags : நாமக்கல்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT