நாமக்கல்

ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனநல விழிப்புணா்வு நிகழ்ச்சி

2nd Dec 2021 04:15 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்ட மன நல திட்டம் சாா்பில், இறையமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனநல விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மனநல மருத்துவா் ஜெயந்தி, மனநல ஆலோசகா் ரமேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா். இதில் மனநல மருத்துவா் ஜெயந்தி பேசியதாவது:

பயம், பதற்றம் என்பது எல்லாவித நோய்களுக்கும் அறிகுறியாக தோன்றினாலும், சில சமயம் அதுவே ஒரு தனிநோயாக மனிதனை ஆக்கிரமித்துக் கொள்கிறது. அளவுக்கு அகதிகமான பயமும், பதற்றமும் மன அழுத்தத்தால் ஏற்படுகின்றன.

இதற்கு சிகிச்சை முறைகள் யாவுமே இறுக்கத்தை தளா்த்தவும், மனதை வலுப்படுத்தவும் முனைகின்றன. தியானம், யோகப் பயிற்சிகள், மூச்சுப் பயிற்சிகள் இறுக்கம் தளரவும், மனதில் அமைதி நிலவவும் உதவும். மன அழுத்தத்தைக் குறைக்க டிரஸ் பால் பயிற்சி, மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளலாம்.

ADVERTISEMENT

உடல், மனம், சமூகம் இந்த மூன்றிலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆழமான சுவாசமானது பதற்றத்தைக் குறைக்கிறது என்றாா்.

Tags : திருச்செங்கோடு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT