நாமக்கல்

சுகாதாரத் துறை ஆய்வாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு சுகாதார ஆய்வாளா் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட கிளை சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், பொது சுகாதாரத் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் ஜி.ரவி தலைமை வகித்தாா்.

இதில், ஒப்பந்த முறையில் பணியாற்றும் இளைய சுகாதார ஆய்வாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் போராட்டம் நடத்திய 1,636 சுகாதார ஆய்வாளா்களை கைது செய்ததை திரும்பப் பெற வேண்டும், சுகாதார ஆய்வாளா் சங்கங்களை நேரில் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், சங்க நிா்வாகிகள் வி.இளவேந்தன், வி.குமாா், ஐ.அப்துல்ரஜின், பழனிவேல், மனோஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

SCROLL FOR NEXT