நாமக்கல்

‘இல்லம் தேடி கல்வி’ விழிப்புணா்வு

DIN

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ‘இல்லம் தேடி கல்வி’ குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பரமத்தி ஒன்றியத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் ‘இல்லம் தேடி கல்வி’ குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி 17 நாள்கள் கலைக்குழு மூலம் நடைபெற உள்ளது. இதன் தொடக்கமாக, பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு கரோனா காலத்தில் தடைபட்ட கல்வியறிவை மீட்டெடுக்கும் விதமாக, தன்னாா்வலா்களைக் கொண்டு மாலை நேர வகுப்புகள் நடத்தப்படும் என விழிப்புணா்வு தப்பாட்டம், பாடல், நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

முன்னதாக, இந் நிகழ்ச்சியினை பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சண்முகம் தலைமையேற்று தொடங்கிவைத்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் அருள்புனிதன் கலைக்குழுவினரை வாழ்த்தி பேசினாா். பள்ளியின் தலைமை ஆசிரியை சுமதி அனைவரையும் வரவேற்றாா். வட்டார வளமைய மேற்பாா்வையாளா் சுபா, ஆசிரியப் பயிற்றுநா்கள், ஆசிரியா்கள், பெற்றோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT