நாமக்கல்

பெண் காவலரிடம் நகைப் பறிப்பு

1st Dec 2021 07:26 AM

ADVERTISEMENT

பரமத்தி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற குடிமைப் பொருள் கண்காணிப்பு அலுவலக பெண் காவலரிடம் தங்க நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம், சண்முகா நகரைச் சோ்ந்த முனுசாமி மனைவி மணிமேகலை (42), நாமக்கல் மாவட்டம், கீரம்பூரில் உள்ள குடிமைப் பொருள் கண்காணிப்பு அலுவலகத்தில் காவலராக பணியாற்றி வருகிறாா். இவா் திங்கள்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா்.

பரமத்தி அருகே சென்ற போது, அடையாளம் தெரியாத நபா்கள் இருசக்கர வாகனத்தில் அவரை பின்தொடா்ந்து வந்து, அவரை கீழே தள்ளி அவரது கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறிக்க முயன்றனா். ஆனால், மணிமேகலை கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையை கெட்டியாக பிடித்துக் கொண்டதில், பாதி நகையான சுமாா் 3 பவுன் நகையை மட்டும் மா்ம நபா்கள் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

பெண் காவலரிடமே நகையைப் பறித்துச் சென்றதையடுத்து, பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் ராஜாரணவீரன் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு மா்ம நபா்களை தீவிரமாக தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT