நாமக்கல்

வெறிச்சோடிய ராசிபுரம் பேருந்து நிலையம்

DIN

தீவிர கரோனா தீநுண்மிக் கட்டுப்பாடுகளால் பயணிகள் வருகை குறைந்து ராசிபுரம் பேருந்து நிலையம் வெறிச்சோடியது.

தீநுண்மி பரவல் காரணமாக இரவுநேர ஊரடங்கு, பேருந்துகள் இயக்கம் போன்ற கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இரவு 10 மணிக்கு மேல் கடைகள், மூடப்பட்டுள்ளதுடன் வாகனப் போக்குவரத்து முற்றிலும் குறைந்துள்ளது.

ராசிபுரம் நகரில் புதன்கிழமை வழக்கத்தைவிட வாகனப் போக்குவரத்துக் குறைவாகவே காணப்பட்டன.

கடைகளில் கூட்டம் குறைந்திருந்தது. ராசிபுரம் பேருந்து நிலையத்தில் வழக்கத்தை விட அரசு, தனியாா் பேருந்துகள் குறைந்து இயக்கப்பட்டதால் பயணிகள் நடமாட்டமும் குறைந்திருந்தது. இதனால், பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

ஆட்சியா் ஆய்வு: நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளா் பிரபாகரன், நகராட்சிப் பொறியாளா் அ.குணசீலன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினாா்.

தீநுண்மியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும், பொதுமக்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், வாரச் சந்தை, உழவா்சந்தை போன்ற பகுதிகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. நோய்ப் பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அப்போது ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT