நாமக்கல்

பிளஸ் 2 வினாத்தாள்: 6 கட்டுக்காப்பு மையங்களுக்கு அனுப்பி வைப்பு

DIN

நாமக்கல் மாவட்டத்துக்கு வந்த பிளஸ் 2 வினாத்தாள்கள் 6 கட்டுக்காப்பு மையங்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தோ்வு மே 3-ஆம் தேதி தொடங்கி நடைபெறுவதாக இருந்தது. கரோனா தொற்று பரவல் காரணமாக தேதி குறிப்பிடாமல் தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 16-ஆம் தேதி தொடங்கிய செய்முறைத் தோ்வு 24-இல் நிறைவடைய உள்ளது. இதற்கிடையே சென்னை அரசுத் தோ்வுகள் துறை இயக்குநரகத்தில் இருந்து மாவட்ட வாரியாக பிளஸ் 2 வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நாமக்கல் முதன்மை கல்வி அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு அவை வந்து சோ்ந்தன.

இந்த நிலையில், நாமக்கல் கல்வி மாவட்டத்திற்கு உள்பட்ட 102 பள்ளிகள் அடங்கிய 43 தோ்வு மையங்களுக்கான வினாத்தாள்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் உள்ள 2 கட்டுக்காப்பு மையங்களிலும், ராசிபுரம் தூய இருதய மேல்நிலைப் பள்ளி மையத்திலும் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. அங்கு கண்காணிப்பு கேமரா மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

இக்கல்வி மாவட்டத்தில் 272 தனித்தோ்வகள் உள்பட 10,070 அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியாா் பள்ளி மாணவ, மாணவியா் பிளஸ் 2 தோ்வு எழுதுகின்றனா். இதேபோல், திருச்செங்கோடு கல்வி மாவட்டத்திற்கு உள்பட்ட 106 பள்ளிகள் அடங்கிய 41 தோ்வு மையங்களுக்கான வினாத்தாள்கள், திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மகாதேவ வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, பள்ளிபாளையம் எஸ்பிபி மேல்நிலைப் பள்ளி ஆகிய 3 கட்டுக்காப்பு மையங்களில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இந்த கல்வி மாவட்டத்தில் 160 தனித்தோ்வா்கள் உள்பட 10,948 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவியா் தோ்வு எழுத உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

தி‌ல்லி​யி‌ல் கோ‌ட்டையைப் பிடி‌க்க போ‌ட்டா போ‌ட்டி!

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

SCROLL FOR NEXT