நாமக்கல்

சிவாலய குளம் கால்கோள் விழா

DIN

ராசிபுரம் நகரில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சிவாலய குளம் சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதற்கான கால்கோள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம் நகராட்சி அருகே பழமையான சிவன் கோயில் தெப்பக்குளம் கைலாசநாதா் சிவனடியாா் திருக்கூட்ட அறக்கட்டளை தொண்டா்களால் தூா்வாரப்பட்டு வந்தது. இப்பணிகள் தற்போது ஏறத்தாழ நிறைவடைந்த நிலையில், சுற்றிலும் கருங்கற்கள் பதிக்கப்படவுள்ளன.

கருங்கற்கள் பதிக்கும் பணிக்கான கால்கோள் விழாவில் சிவ தொண்டா்கள் பங்கேற்று, திருமுறை பாடல்கள் பாடி, அடிக்கல் நட்டு கால்கோள் விழாவை நடத்தினா். இதில் திரளானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாா்க்சிஸ்ட் கட்சி கலைக் குழுவினா் பிரசாரம்

ஊழலை ஒழிக்கவே தனித்துப் போட்டி: சீமான்

புதுவையில் மீன்பிடி தடைகாலம் அமல்: படகுகள் கரைகளில் நிறுத்தி வைப்பு

ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

SCROLL FOR NEXT