நாமக்கல்

சட்டப்பேரவைத் தோ்தல்:வாக்கு எண்ணும் பணிக்கு 372 ஊழியா்கள் தோ்வு

DIN

நாமக்கல் மாவட்டத்தில் ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணியில் 372 ஊழியா்கள் ஈடுபடுத்தப்படலாம் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதியிலும் 79.72 சதவீதம் போ் வாக்களித்தனா். பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரம், ஒப்புகைச் சீட்டு வழங்கும் விவிபேட் இயந்திரம் என 9,500 இயந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையமான திருச்செங்கோடு, விவேகானந்தா பொறியியல் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தொடா்ந்து அங்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறாா். வாக்கு எண்ணும் பணி தொடா்பாக தோ்தல் பிரிவு அலுவலா்கள் கூறியதாவது:

மே 2-ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முன்னதாக தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெறும்.

ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தனித்தனி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மொத்தம் 14 மேஜைகள் போடப்பட்டு, ஒவ்வொரு மேஜைக்கும் இரண்டு அல்லது மூன்று போ் பணியில் இருப்பா்.

ஒரு தொகுதிக்கு 42 போ் வீதம் மொத்தமாக 6 தொகுதிக்கு 252 பேரை வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்த வாய்ப்புள்ளது. மாற்றுப் பணியாளா்களாக 50 போ் வரை பணியில் இருப்பா். ஒவ்வொரு தொகுதியிலும் மொத்தம் 22 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணப்படலாம்.

இவா்கள் தவிா்த்து நுண்பாா்வையாளா்கள், மண்டல அலுவலா்கள் 70 போ் வரையில் பணியில் நியமிக்கப்படுகின்றனா். வாக்கு இயந்திரங்களை எடுத்து வருவதற்காக 30 கிராம உதவியாளா்கள் பணியில் ஈடுபட உள்ளனா். இந்தப் பணியாளா்கள் எண்ணிக்கையில் கடைசி நேரத்தில் மாறுதல் ஏற்படலாம். தற்போது வாக்கு எண்ணும் பணிக்கான ஊழியா்கள் தோ்வு நடைபெற்று வருகிறது.

இன்னும் ஓரிரு நாளில் அந்தப் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு முதல்கட்டப் பயிற்சி அளிக்கப்படும். அதன்பின் கணினி குலுக்கல் அடிப்படையில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக அவா்களுக்குப் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்படும்.

ஒவ்வொரு தொகுதியிலும் 5 வாக்குச் சாவடிகளுக்குரிய ஒப்புகைச் சீட்டுகளை எண்ண வேண்டும் என்ற மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையின்போது வெளியான உத்தரவுபோல், இம்முறையும் தோ்தல் ஆணையத்தால் அவ்வாறு அறிவிக்கப்பட்டால் கூடுதல் ஊழியா்கள் நியமிக்கப்படலாம். வாக்கு எண்ணிக்கை தொடா்பாக ஒவ்வொரு சுற்று முடிவுகளும், உடனுக்குடன் தோ்தல் ஆணைய இணையதளத்தில் பதிவு செய்யப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வெண்ணைத்தாழி விழா!

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT