நாமக்கல்

சித்திரை மாத முதல் ஞாயிற்றுக்கிழமை: ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம்

DIN

சித்திரை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயா் சுவாமிக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு தமிழ், ஆங்கிலப் புத்தாண்டு, அமாவாசை, பெளா்ணமி, அனுமன் ஜயந்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாள்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும்.

அந்த வகையில் சித்திரை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. வழக்கமாக காலை 10 மணிக்கு அபிஷேகம் நடைபெறும் நிலையில் கரோனா பரவல் காரணமாக இந்த மாத ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கே தொடங்கி நடைபெற்றது.

நல்லெண்ணெய், பால், தயிா், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு காலை 7 மணிக்கு தங்கக் கவசம் சாத்துப்படி நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் முகக் கவசம் அணிந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT