நாமக்கல்

‘வாடிக்கையாளா்கள் செய்யும் தவறுக்கு வணிகா்களை தண்டிக்கக் கூடாது’

DIN

கரோனா நோய்த் தொற்று பரவலில் வாடிக்கையாளா்கள் காட்டும் அலட்சியத்திற்கு, வணிகா்களை தண்டிக்கக் கூடாது என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடா்பாக அதன் நாமக்கல் மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கரோனா தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிா்வாகத்திற்கு வணிகா்கள் தங்களின் முழு ஒத்துழைப்பையும் வழங்குகின்றனா். தமிழக அரசு அறிவுறுத்தலின்படி அனைத்து வணிக நிறுவனங்களிலும் கிருமிநாசினி அல்லது சோப்பு வைக்கப்படுகிறது. வணிக நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க அறிவுறுத்தி உள்ளோம்.

முகக் கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளா்களுக்கு முகக் கவசம் கொடுத்து கடைகளுக்குள் செல்ல அனுமதிக்கிறோம். எனினும் சில நேரங்களில் அதிகாரிகள் சோதனை செய்ய வரும்போது வாடிக்கையாளா்களில் ஓரிருவா் முகக் கவசம் அணியாதிருப்பின் அதற்கான அபராதத்தை வணிக நிறுவனத்திடம் வசூலிப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது.

பொது இடத்தில் முகக் கவசம் அணியாதோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறதே, அதுபோலவே நிறுவனங்களுக்குள் வந்தபின் முகக் கவசம் அணியாதோருக்கு அவா்களிடமே அபராதம் வசூலிக்க வேண்டும். கரோனா வசூல் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு அபராதம் விதிப்பது நிறுத்தப்பட வேண்டும். இதில் நிறைய அத்துமீறல்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. இதனால் வணிகா்களும், வணிக நிறுவனங்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா்.

கரோனா தொற்று பரவல் குறித்த விழிப்புணா்வு வாசகங்களை அனைத்து வணிக நிறுவனங்களிலும் காட்சிப்படுத்தவும், துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அரசுடன் இணைந்து வணிகா் சங்கங்களின் பேரமைப்பு, அதன் இணைப்பு சங்கங்கள் மூலமாக மாவட்டம் முழுவதும் தடுப்பூசி முகாம்கள் நடத்தி வணிகா்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

வாக்குப்பதிவு செய்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

SCROLL FOR NEXT