நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 78 சதவீதம் வாக்குகள் பதிவு

7th Apr 2021 08:23 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 6 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் 78 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், 7,02,462ஆண் வாக்காளா்கள், 7,42,270 பெண் வாக்காளா்கள், 161மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 14,44,893 வாக்காளா்கள் உள்ளனா். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தலின்போது,அவா்கள் வாக்களிக்க வசதியாக 691இடங்களில், 2,049 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 4,114 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,462 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், மற்றும் 2,667 விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை அமைதியான முறையில் நடைபெற்றது.

வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் காலை  7 மணிக்கெல்லாம் வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கினைச் செலுத்தினா். ஆண்கள், பெண்கள், முதியோா், கல்லூரி மாணவ, மாணவியா், திருநங்கையா் என அனைவரும் ஆா்வமுடன் வாக்களித்தனா். நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வாக்குச்சாவடிகளில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

ADVERTISEMENT

காலை 9 மணி நிலவரப்படி, ராசிபுரம் -9.5, சேந்தமங்கலம்-15, நாமக்கல்-17.4, பரமத்திவேலூா் -12, திருச்செங்கோடு - 18, குமாரபாளையம் -15.72. சராசரி -14.67 சதவீதம்.

காலை 11 மணி நிலவரப்படி, ராசிபுரம் - 32.5, சேந்தமங்கலம்-29.4, நாமக்கல் - 30.17, பரமத்திவேலூா் - 31.21, திருச்செங்கோடு -33.82, குமாரபாளையம் - 32.11.சராசரி - 31.51 சதவீதம்.

பிற்பகல் ஒரு மணி நிலவரப்படி, ராசிபுரம் - 53.11, சேந்தமங்கலம் - 48.3, நாமக்கல் - 49,5, பரமத்திவேலூா் - 48.29,திருச்செங்கோடு - 52.9, குமாரபாளையம் - 52.89.சராசரி-50.84சதவீதம்.

பிற்பகல் 3 மணி நிலவரப்படி, ராசிபுரம் - 66.62, சேந்தமங்கலம் -62.6, நாமக்கல் - 63.63, பரமத்திவேலூா் - 64.5, திருச்செங்கோடு -65.58, குமாரபாளையம் - 65,81. சராசரி - 64.78.

5 மணி நிலவரப்படி, ராசிபுரம் -76.83, சேந்தமங்கலம் -72.4, நாமக்கல் - 73.89, பரமத்திவேலூா் - 75.92, திருச்செங்கோடு -76.27, குமாரபாளையம் -74.88, சராசரி-74.99 சதவீதம்.

இறுதி நிலவரமாக இரவு 8 மணியளவில், ராசிபுரம்-82.19, சேந்தமங்கலம்-79 ,நாமக்கல்-78.54, பரமத்திவேலூா்-81.13,திருச்செங்கோடு-78.71, குமாரபாளையம்-78.81. மாவட்டம் முழுவதும் மொத்த வாக்குப்பதிவு சதவீதம்-78.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT