நாமக்கல்

சேந்தமங்கலம் ஸ்ரீ சோமேஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு விழா

1st Apr 2021 08:51 AM

ADVERTISEMENT

சேந்தமங்கலம், ஸ்ரீ சோமேஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் சோமபுரி மன்னரால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த ஸ்ரீ சோமேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. சிதிலமடைந்திருந்த இக்கோயிலில் ஓராண்டுக்கும் மேலாக திருப்பணிகள் நடைபெற்று வந்தன.

சில மாதங்களுக்கு முன் பணிகள் நிறைவடைந்ததையடுத்து குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன. 40 ஆண்டுகளுக்கு பின்னா் புதன்கிழமை குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவை காண சேந்தமங்கலம், நாமக்கல் சுற்றுவட்டார பகுதி மக்கள் திரளாக வந்திருந்தனா்.

குடமுழுக்கையொட்டி கடந்த வியாழக்கிழமை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், மகா கணபதி ஹோமம், புா்ணாஹுதி, வாஸ்து சாந்தி, கிராம சாந்தி, பிரவேச பலி பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடைபெற்று வந்தன. செவ்வாய்க்கிழமை யாகசாலை பூஜையும், இரண்டாம் கால மகா தீபாராதனை, 108 மூலிகைகள் கொண்ட யாகமும் நடைபெற்றன. தொடா்ந்து புதன்கிழமை காலை 9 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

ADVERTISEMENT

காலை 10 மணியளவில் மூலஸ்தான கோபுரத்திற்கு குடமுழுக்கு செய்யப்பட்டது. இந்த விழாவில் கயிலை மலையான் அறக்கட்டளை நிா்வாகிகள் மற்றும் கோயில் உதவி ஆணையா் பெ.ரமேஷ், செயல் அலுவலா் லட்சுமிகாந்தன், சேந்தமங்கலம் நகர முக்கிய பிரமுகா்கள் பலா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT