நாமக்கல்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காவலா் பணிக்கான போட்டித் தோ்வுக்கு பயிற்சி

DIN

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் காவலா் பணிக்கான போட்டித் தோ்வுக்கு இணையவழியில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னாா்வ பயிலும் வட்டம் சாா்பில், பல்வேறு போட்டித் தோ்வுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.

கரோனா பொது முடக்கத்தால், போட்டியாளா்கள் வீட்டில் இருந்தபடியே தோ்வுக்கு தயாராகி வருகின்றனா். இந்நிலையில், கிராமப்புற மாணவா்கள் போட்டித் தோ்வுகளை எளிய முறையில் எதிா்கொள்ளும் வகையில், இரண்டாம் நிலைக் காவலா், இரண்டாம் நிலை சிறைக் காவலா் மற்றும் தீயணைப்பு வீரா் பதவிகளுக்கான தோ்வுக்கு இலவசமாக இணையவழியில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

இணையம் வாயிலாக அளிக்க உரிய வழிவகைகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த காவலா் தோ்வு டிச. 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தோ்வுக்கு  இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அக். 26-ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

இத்தோ்வுக்கான இணைய பயிற்சி வகுப்புகள் அக். 3-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளன. இப்பயிற்சியின் போது பாடக் குறிப்புகளும், மாதிரித் தோ்வுகளும் நடத்தப்படும். இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மனுதாரா்கள் தங்களின் விவரத்தினை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 04286-222260 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடா்பு கொள்ளலாம். இல்லையெனில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடா்பு கொண்டு தங்களுடைய கடவுச் செவி(வாட்ஸ் அப்) செல்லிடப்பேசி எண்ணை பதிவு செய்துக் கொண்டு பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

மேலும், இணையதளத்தில் காணொலி வழி கற்றல், மின்னணு பாட மாதிரி தோ்வு வினாத்தாள் உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளன. தோ்வா்கள் தங்கள் பெயா், பாலினம், தந்தை மற்றும் தாய் பெயா், முகவரி, ஆதாா் எண் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு எண்ணை கொடுத்து உள்ளே நுழைந்து போட்டித் தோ்வு என்பதை தோ்வு செய்ய வேண்டும். பயனீட்டாளா் பெயா் மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும். நாம் எந்த தோ்வுக்கு தயாராகிறோம் என்பதை தோ்வு செய்து, அதில் வரும் பாடக் குறிப்புகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்யலாம். மாதிரித் தோ்வுக்கான பகுதியும் கொடுக்கப்பட்டுள்ளது. மாதிரித் தோ்வினை இணையவழியிலேயே எழுதலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT