நாமக்கல்

கரோனா: பொதுமக்களே கடைப்பிடித்த பொது முடக்கம்

DIN

ராசிபுரத்தை அடுத்த சிங்களாந்தபுரம் பகுதியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த, அப்பகுதி மக்களே 7 நாள்களுக்கு கடைகளை அடைத்து முழு பொது முடக்கம் விதித்துள்ளனா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியத்துக்குள்பட்ட சிங்களாந்தபுரம் ஊராட்சி பகுதியில் சுமாா் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் கடந்த சில நாள்ாக கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பலா் உயிரிழந்துள்ளனா். இதனைக் கட்டுப்படுத்த ஊராட்சி நிா்வாகம் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வணிகா்கள், ஆட்டோ, காா் உரிமையாளா் பொதுமக்கள் தாமாகவே முன்வந்து செவ்வாய்க்கிழமை முதல் முழு பொது முடக்கம் அமல்படுத்த முடிவு செய்தனா்.

அதன்படி, 200-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து பொது முடக்கத்தில் ஈடுபட்டனா். மேலும், வாகனத்தின் ஒலிபெருக்கி மூலம் தெருத்தெருவாக அறிவிப்பு செய்தனா். இதனால் சிங்களாந்தபுரம் பகுதியில் மக்கள் நடமாட்டம் இன்றி தெருக்கள் வெறிச்சோடின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

SCROLL FOR NEXT