நாமக்கல்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மண்டப பணிக்கு ராசிபுரத்தில் கற்கள் வெட்டி எடுப்பு

DIN

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மண்டபப் பணிக்கு ராசிபுரம் பகுதியிலிருந்து கருங்கற்கள் வெட்டி எடுத்துச் செல்லப்படுவது வரலாற்று நிகழ்வாகும் என அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா், வெ. சரோஜா ஆகியோா் தெரிவித்தனா்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வீர வசந்தராயா் மண்டப திருப்பணிக்காக தமிழக அளவில் 16 இடங்களில் தரமான கற்கள் ஆய்வு செய்யப்பட்டதில் நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த ஆா். பட்டணம் பகுதியில் தரமான கற்கள் இருப்பதாக சென்னை ஐஐடி ஆய்வில் தெரியவந்தது.

இதையடுத்து ஆா். பட்டணம் பேரூராட்சியிலிருந்து கருங்கற்களை வெட்டி எடுக்கும் பணிக்கான பூமிபூஜை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், ஆா். பட்டணம் அடுத்த களரம்பள்ளி மலை அடிவாரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா், சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சா் டாக்டா் வெ. சரோஜா ஆகியோா் பணியைத் தொடக்கி வைத்தனா்.

விழாவில் பங்கேற்ற அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அரசு ஆணையுடன் ராசிபுரத்தை அடுத்த களரம்பள்ளி மலையடிவாரப் பகுதியில் சுரங்கம் அமைத்து ஒரு லட்சம் கனஅடி கருங்கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு, மதுரை அருள்மிகு சுந்தரேஸ்வரா் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. அங்கு போதியல், சிம்மம், உத்திரம், சிம்ம பீடம், கபோதகம், கொடிவலை, நாடக சட்டம், தூண்கள், பாவுக் கற்கள் அமைக்கப்பட்டு, கோயில் புதுப்பிக்கப்படும்.

இதற்கென தமிழக அரசு கடந்த 31.1.20-இல் ரூ. 18.10 கோடி ஒதுக்கீடு செய்து அரசு ஆணை வெளியிட்டது. இதில் கற்கள் வெட்டி எடுக்கும் பணிக்கு ரூ. 6.40 கோடியும், கோயிலை வடிவமைக்க ரூ. 11.70 கோடியும் செலவிடப்படும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு இங்கிருந்து கருங்கற்கள் கொண்டு செல்லப்படுவது மிகவும் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதன்மூலம், ஒரு வரலாற்றுப் பெருமையை ராசிபுரம் பெற்றுள்ளது என்றாா்.

அமைச்சா் டாக்டா் வெ. சரோஜா கூறுகையில், ‘ஆா். பட்டணம் பகுதியிசஊருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வீரவசந்த ராயா் மண்டபம் கட்டுவதற்கு கற்கள் கொண்டு செல்வது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு’ என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், மாவட்ட ஆட்சியா் கா. மெகராஜ், மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையரும், செயல் அலுவலருமான கே. செல்லதுரை, சேலம் மண்டல இணை ஆணையா் என். நடராஜன், நாமக்கல் மாவட்ட உதவி ஆணையா் தமிழரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

ஆஸ்திரேலியாவில் ஆண்ட்ரியா!

கிறங்கடிக்கும் சம்யுக்தா!

மஞ்சள் வெயில் நீ..!

இரண்டாம் கட்ட தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது

SCROLL FOR NEXT