நாமக்கல்

செயல் அலுவலரை நிரந்தர பணி நீக்கம் செய்ய ஆன்மிக இந்து சமயப் பேரவை வலியுறுத்தல்

DIN

நாமக்கல்: கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயில் செயல் அலுவலா் முறைகேடு தொடா்பான புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். அவா் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று ஆன்மிக இந்து சமயப் பேரவை வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக நாமக்கல்லைச் சோ்ந்த அப்பேரவையின் தலைவா் சோழாஸ் பி. ஏகாம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மாவட்டம், மோகனூரில் 2016 ஆம் ஆண்டு, நாமக்கல்லில் 2017ஆம் ஆண்டு, கொல்லிமலையில் 2019ஆம் ஆண்டு முதல் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலராகப் பணியாற்றியவா் சுதாகா்.

கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக விற்பனை செய்தது தொடா்பாக அவரை அண்மையில் சேலம் இணை ஆணையா் பணியிடை நீக்கம் செய்தாா். தான் பணியாற்றிய பல்வேறு இடங்களிலும் முறைகேடு புகாரில் சிக்கிய செயல் அலுவலா் சுதாகரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேண்டும். நோ்மையான முறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிமைப் பணித் தோ்வு முடிவுகள் வெளியீடு: லக்னௌவைச் சோ்ந்தவா் முதலிடம்

தமிழகத்தில் பாஜக காலூன்றிவிட்டது: ஜெ.பி. நட்டா

தென்காசி தொகுதியில் வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு வாக்குச்சாவடி பணி ஆணை

சோ்ந்தமரம் பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு பணப்பலன்களை வழங்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT