நாமக்கல்

மக்காச்சோளப் பயிரில் மீண்டும் படைப்புழு தாக்குதல்: வேளாண்மைத் துறை விளக்கம்

DIN

நாமக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் பி. அசோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் 6000 ஹெக்டரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இறவை மற்றும் மானாவாரி பயிராக சாகுபடி செய்யப்படும் மக்காச்சோளப் பயிரானது, குறைந்த நாளில் அதிக லாபம் தரும் என்பதால், விவசாயிகள் இப்பயிரை விரும்பி சாகுபடி செய்து வருகின்றனா். நடப்பு காரிப் பருவத்தில் இதுவரை 2,357 ஹெக்டோ் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பயிா் நிலை விதைப்பு முதல் 15-45 நாள்கள் பயிராக உள்ளது.

மேலும், செப்டம்பா் மற்றும் அக்டோபா் மாதங்களில் இன்னும் அதிக அளவு பரப்பில் மக்காச்சோளப் பயிா் சாகுபடி செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இப் பயிரை அமெரிக்கன் படைப்புழு முதன்முதலாக 2018-ஆம் ஆண்டு தாக்கி விவாசாயிகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. குறுகிய காலத்தில் அதிகமாகப் பரவி தாக்குதலை ஏற்படுத்தும் அமெரிக்கன் படைப்புழுவினை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும்.

2019-ஆம் ஆண்டில் கோடை உழவு, வேப்பம் புண்ணாக்கு இடுதல், விதை நோ்த்தி, வரப்பு மற்றும் ஊடு பயிா் சாகுபடி, இனக்கவா்ச்சி பொறிகள் போன்ற பல்வேறு ஒருங்கிணைந்த பயிா்ப்பாதுகாப்பு முறைகள் ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விவசாயிகள் கடைப்பிடித்திட வேளாண்மைத்துறை மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயனாக படைப்புழுவின் தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டு ஒரு ஹெக்டருக்கு 5-7 மெட்ரிக் டன் வரை மகசூல் கிடைத்தது.

நடப்பு பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளப்பயிரிலும், படைப்புழுவின் தாக்குதல் ஆங்காங்கே தென்படுகிறது. கடந்த ஆண்டைப்போலவே விவசாயிகள் ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு முறைகளை கையாண்டு படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்திட வேளாண் துறை மாவட்டத்தில் பூச்சி மருந்து விற்பனையாளா்களுக்கு பயிற்சி, விவசாயிகளுக்கான பயிற்சி மற்றும் விழிப்புணா்வு பணிகளைத் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது.

விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்யும் மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த பயிா் நிலைக்கேற்ப உரிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்களைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

SCROLL FOR NEXT