நாமக்கல்

சிலம்பொலியார் 92-ஆவது பிறந்த நாள்: பல்வேறு கட்சியினர் மரியாதை

DIN

நாமக்கல்லில் மறைந்த தமிழறிஞர் சிலம்பொலி சு. செல்லப்பனாரின் 92-ஆவது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

நாமக்கல் அருகே சிவியாம்பாளையத்தை பூர்வீகமாக கொண்டவர் சிலம்பொலி சு செல்லப்பனார். 1938ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி பிறந்த அவர் சிறுவயது முதலே தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினார். சிலப்பதிகாரத்தை தன்னுடைய தூய தமிழில் பேசி கிராமப்புறத்தில் உள்ளோரையும் அந்நூலின் மேன்மையைப் பற்றி அறியச் செய்தார். மறைந்த சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், செல்லப்பனாரின் மேடைப்பேச்சை ரசித்து அவரை பாராட்டியதுடன் சிலம்பொலி என்ற பட்டத்தையும் அவருக்கு சூட்டினார். 

கடந்த ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி தன்னுடைய 90-ஆவது வயதில் காலமானார். அவர் பிறந்த சிவியாம்பாளையம் கிராமத்தில் செல்லப்பனாரின் திருவுருவச் சிலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வியாழக்கிழமை (செப்.24) அவரது 92-ஆவது பிறந்தநாளையொட்டி சிலை அமைக்கும் இடத்தில் பீடம் அமைப்பதற்கான பூமி பூஜை விழா கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நடைபெற்றது. இவ்விழாவில் அக்கட்சியினர் மட்டுமின்றி சிலம்பொலியாரின் மகன் கொங்குவேள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், திமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள், கல்வியாளர் ஆர்.பிரணவ் குமார்  மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

மேலும் சிலம்பொலியார் வீட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு பல்வேறு கட்சியினர், அமைப்பினர், தமிழறிஞர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல் நாமக்கல் திமுக அலுவலகத்தில் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். நாமக்கல்- மோகனூர் சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அருகில் சிலம்பொலியார்  திருவுருவப் படத்திற்கு முன்னாள் மத்திய இணை அமைச்சர் செ. காந்திசெல்வன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

அட்லியின் தீயான நடனம்: வைரலாகும் விடியோ!

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

உரத் தொழிற்சாலையை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பு: 5 கிராம மக்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT