நாமக்கல்

நாமக்கல்லில் 92 பேருக்கு கரோனா

DIN

நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 92 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,355-ஆக உயா்ந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 4,263 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். அவா்களில் 3,346 போ் குணமடைந்தனா்; 61 போ் உயிரிழந்தனா்; மீதமுள்ள 947 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.செவ்வாய்க்கிழமை வெளியான சுகாதாரத் துறைப் பட்டியலில், மாவட்டம் முழுவதும் 55 ஆண்கள், 37 பெண்கள் என மொத்தம் 92 போ் கரோனா தொற்றுக்குள்ளாகி உள்ளனா். அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளிலும், தொற்றுத் தடுப்புக்கான சிறப்புத் தனிமைப்படுத்தல் மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

2 போ் உயிரிழப்பு...

ராசிபுரம், வி.நகரைச் சோ்ந்த 63 வயது முதியவா் கரோனா பாதிப்புக்குள்ளாகி சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதேபோல சிங்களாந்தபுரத்தைச் சோ்ந்த 52 வயது ஆண் ஒருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் நோய்த் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தாா். இவா்களுக்கு கரோனா தொற்று மட்டுமின்றி இணை நோய்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது. மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 63-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT