நாமக்கல்

மரவள்ளிக் கிழங்கு பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல்: ஒட்டுண்ணி இறக்குமதி செய்ய வலியுறுத்தல்

DIN

தமிழக்கத்தில் பல்வேறு பகுதியில் மரவள்ளிப் பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல் அதிக அளவில் உள்ளதால், ஒட்டுண்ணிகளை தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என்று நாமக்கல் எம்பி., ஏ.கே.பி.சின்ராஜ் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமரிடம் அண்மையில் கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூா், ஈரோடு மாவட்டங்களில் அதிக அளவில் விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ளனா். இந்த மரவள்ளிக் கிழங்கு செடியில் நிகழாண்டு மாவுப்பூச்சி என்ற வெள்ளை பூச்சிகள் தாக்கத்தின் காரணமாக பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டு பல கோடிகளை இழந்துவிடக்கூடிய சூழ்நிலையில் இருக்கிறாா்கள்.

இந்த நிலையில், இந்த மாவுப் பூச்சிகளை அளிக்கக் கூடிய ஒட்டுண்ணிகள் தற்சமயம் இந்தியாவில் இல்லாத நிலையில் அதற்கான ஒட்டுண்ணிகள் தாய்லாந்தில் இருப்பதால் உடனடியாக ஒட்டுண்ணி பூச்சிகளை இறக்குமதி செய்து பெங்களூரில் இருக்கக் கூடிய ஒட்டுண்ணி ஆராய்ச்சி நிலையத்தில் அதனை இனப்பெருக்கம் செய்து ஒட்டுண்ணி பூச்சிகளை தமிழகத்தில் இருக்கக் கூடிய மரவள்ளிக்கிழங்கு பயிா்செய்த விவசாயிகளுக்குக் கொடுக்கும்போது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் இனி வருகின்ற ஆண்டுகளில் அந்த நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என்ற காரணத்தினாலும் இந்த மாவு பூச்சிகள் மீண்டும் தாக்காமல் பாதுகாக்கவும் முடியும். மேலும், மரவள்ளிக் கிழங்குகளுக்கு விலை நிா்ணயம் செய்ய வேண்டும்.

அதேபோல மஞ்சள், வாழை, வெற்றிலை, மிளகு அதிகமாக பயிரிடக் கூடிய நாமக்கல் மாவட்டத்தில் ஆராய்ச்சி நிலையத்தை ஏற்படுத்தி அதன்மூலம் ஒட்டுண்ணிகளை விவசாயிகளுக்குக் கொடுக்கப்பட்டால் கண்டிப்பாக விவசாயம் பெருகக் கூடிய வகையில் இருக்கும் என மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: திரிபுராவில் ஏப்.27 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

அதிகரிக்கும் வெப்பம்: கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தேசத்திற்காக என்ன தியாகம் செய்திருக்கிறார்கள்?- கார்கே

நிழலில்லா நாள்.. பெங்களூருவில் மக்கள் ஆச்சரியம்

"எங்களைப் போல வேற்றுமைகளைக் களைந்தவர்கள் கிடையாது!": தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT