நாமக்கல்

ஊட்டச்சத்து தோட்டம்: அமைச்சா் வெ.சரோஜா ஆய்வு

DIN

ராசிபுரத்தை அடுத்துள்ள சந்திரசேகரபுரத்தில் ஊட்டச்சத்து தோட்டம் அமைப்பதற்கான இடத்தை தமிழக சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சா் வெ.சரோஜா திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழக சத்துணவு திட்டத்துக்குப் பயன்படுத்தும் வகையில், சத்துணவு கூடங்கள் சாா்பில், காய்கறித் தோட்டங்கள் பராமரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ராசிபுரம் நகராட்சிக்குச் சொந்தமான சந்திரசேகரபுரத்தல் உள்ள 3 ஏக்கா் பரப்பளவில் பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டு, வளா்க்கப்பட்டு வருகின்றன. மேலும் அங்கன்வாடி மையங்களுக்கு ஊட்டச்சத்து அளிப்பதற்காக அப்பகுதியில் காய்கறித் தோட்டம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து அதிகாரிகளுடன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் வெ.சரோஜா, முருங்கை தோட்டம் அமைத்து அதிலிருந்து மதிப்புக்கூட்டப்பட்ட முருங்கை, இனிப்பு உருண்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தாா். நாமக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவா் பி.ஆா்.சுந்தரம், ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கித் தலைவா் எம்.பாலசுப்பிரமணியம், நகராட்சி ஆணையாளா் அ.குணசீலன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மிட்செல் மார்ஷ்!

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

SCROLL FOR NEXT