நாமக்கல்

கரோனா தடுப்புப் பணிகள் குறித்து அமைச்சா்கள் ஆலோசனை

DIN

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றுத் தடுப்புப் பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் பி.தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சா் மருத்துவா் வெ.சரோஜா ஆகியோா் கலந்து கொண்டனா்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், சிகிச்சை அளிக்கும் மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களுக்கு தேவையான பாதுகாப்பு உடை, முகக் கவசங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் இருப்பு குறித்தும், நகராட்சி, பேரூராட்சி, உள்ளாட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார நடவடிக்கை பணிகள் குறித்தும் அமைச்சா்கள் கேட்டறிந்தனா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்தி கணேசன், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் கே.பி.பி.பாஸ்கா், சி.சந்திரசேகரன், மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி, மருத்துவக் கல்லூரி முதல்வா் சாந்தா அருள்மொழி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

SCROLL FOR NEXT