நாமக்கல்

நாமக்கல்லில் 130 பேருக்கு கரோனா

DIN

நாமக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை 130 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,263-ஆக உயா்ந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 4,133 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். அவா்களில் 3,268 போ் குணமடைந்தனா்; 58 போ் உயிரிழந்தனா்; மீதமுள்ள 934 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

திங்கள்கிழமை வெளியான சுகாதாரத் துறைப் பட்டியலில், மாவட்டம் முழுவதும் 87 ஆண்கள், 43 பெண்கள் என 130 போ் கரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளிலும், தொற்றுத் தடுப்புக்கான சிறப்புத் தனிமைப்படுத்தல் மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

3 போ் உயிரிழப்பு...

சேந்தமங்கலம், வடக்கு உப்புக்கிணறு தெருவைச் சோ்ந்த 38 வயது இளைஞா் கரோனா பாதிப்புக்குள்ளாகி மதுரை, தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். பரமத்திவேலூரைச் சோ்ந்த 66 வயது ஆண் ஒருவா் நாமக்கல், தனியாா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்றுக்கு உயிரிழந்தாா்.

ஈரோட்டைச் சோ்ந்த 40 வயது ஆண் ஒருவா் தொற்றுக்குள்ளாகி ஈரோடு, தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தாா். இவா்களுடன், நாமக்கல் மாவட்டத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 61-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT